சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியன் 2 படத்துக்காக வெளிநாட்டு ஜிம் ட்ரெய்னர் உதவியுடன் உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து இந்தியன் 2வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரியவுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், படக்குழுவினர் இதுகுறித்து எந்தவொரு தகவலுமே தெரிவிக்கவில்லை. தற்போது, இதில் சிம்புவும் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்ற புதிய செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஷங்கர் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற செய்தியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்க்கான முதல் கட்ட பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news