Inandoutcinema - Tamil cinema news

பரியேறும் பெருமாள், நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம் – நடிகர் சித்தார்த்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம்தான் பரியேறும் பெருமாள் ஆகும். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேற்று இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கூடுதல் திரையரங்கில் வெளியாக ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், விக்னேஷ் சிவன் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பரியேறும் பெருமாள் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், கூறியதாவது :

பரியேறும் பெருமாள் படம் தமிழ் சினிமாவின் சுடர்விடும் புதிய பயணத்தை தொடக்கி வைத்திருக்கிறது. மாரி செல்வராஜின் இயக்கம் சிறப்பு. நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம். இந்தப் படம் என்னை ஆழமாக பாதித்தது. படம் முடிந்த பின்னரும் பல மணி நேரம் என்னுடன் பயணித்தது. கதிரின் நடிப்பு உணர்ச்சிப்பூர்வமானது என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news