September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சித்தார்த் தொடங்கிய “கேரளா டொனேஷன் சேலஞ்” – வெல்டன் பிரதர் #KeralaDonationChallenge

சென்னை: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சித்தார். கட்சியாக இவர் மலையாளத்தில் நடித்த படம் குமார சம்பவம். சித்தார்த்துக்கு சமூக சேவை மற்றும் பொதுக்காரியங்களிலும் ஈடுபாடு அதிகம்.

மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் தன்மை கொண்டவர். அது பல நேரங்களில் கேலி கிண்டகளுக்கு ஆளானாலும் இம்முறை அவர் பதிவிட்டிருந்த ஒரு டிவிட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், அவ்வரது சேவை என்னம் நெகிழ வைத்துள்ளது.

கேரளாவில் பருவ மழையால அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பல்வேறு தரப்பு மக்கள் உதவி வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சித்தார் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வண்ணம் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “நான் உங்களுக்கு சவால் விட்டுகிறேன்… உங்களை வேண்டி கேட்கிறேன்” நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதை படித்து, பகிர வேண்டும்” என்றும்..

#KeralaDonationChallenge ஹேஷ் டேக் செய்து இதுபோன்று மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார். எதையுமே சற்று பரபரப்பாகவும், வித்யாசமாகவும் செய்து அனைவரின் கவணத்தை ஈர்க்கும் சித்தார். கேரளா மக்களுக்கு உதவுவதிலும் அதை சிறப்பாக செய்துள்ளார். சித்தார்த்தின் இந்த முயர்ச்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து 500, 1000 என தங்களால் முடிந்த தொகையை அளித்து அதை பதிவிட்டுள்ளனர். – வெல்டன் சித்தார்த்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news