Inandoutcinema - Tamil cinema news

இவங்கெல்லாம் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க. மேடையில் வெளிப்படையாக பேசிய சித்தார்த். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது.

திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது.

ஷாங்காய் மற்றும் ரொட்டர்டாம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் ராம் தமிழில் பேசியும் தமிழின் தொன்மையை பற்றியும் பேசியது அனைவரும் அறிந்ததே. பேரன்பு படத்தின் இசை மற்றும் டீசெர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நடிகர் சித்தார்த் கூறியதாவது :

இந்த விழாவில் கலந்துகொண்ட அமீர், மிஸ்கின், ராம், சமுத்திரகனி இவங்கள 10 வருஷத்துக்கு பார்த்திருந்த அவங்களுக்கிட்ட வாய்ப்பு கேட்டுருப்பேன். ஆனா இப்ப இவங்க எல்லாரும் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news