ஜெய், காயத்ரியை தொடர்ந்து குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர்

இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி ஆகும். இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்து பிரபலமடைந்தவர். கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக இவர் அறிமுகம் ஆனார். அதன்பின் கோ, யுவன் யுவதி உள்ளிட்ட பல படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு சிறிதளவு பிரபலம் கிடைத்தது. இருப்பினும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி சாலையில் நின்ற வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று உள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தெரிவித்து உள்ளனர். அவரிடம் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். விபத்து ஏற்படுத்திய மகிழுந்து [car] காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே நடிகர் ஜெய், நடிகை காயத்ரி உள்ளிட்டோரும் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news