ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த நடிகர் சசிகுமார் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் ரஜினி நடிக்கிறார் என கூறப்படுகிறது. தற்போது வாராணாசியில் ரஜினி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்ற தகவல் இன்னும் சரிவர தெரியவில்லை. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் என பலரும் நடிக்கும் படத்தில் தற்போது சசிகுமாரும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news