நடிகர் ரஜினியை கழுவி ஊத்தும் இணையவாசிகள் – ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு போட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது அம்பலமாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் இதில் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலால் செய்தியாளர்கள் வாயடைத்துப் போயினர். ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு என்றாலே அவரது பேச்சு வேடிக்கையாகிவிடுகிறது. அவரே ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு கட்சியின் கொள்கை என்னன்னு கேட்டதால தலை சுத்திடுச்சுன்னு சொன்னவரு நம்ம ரஜினிகாந்த். அப்பொழுது தலை சுத்திடுச்சு என்ற வார்த்தை ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரஜினி சொன்ன மற்றொரு வார்த்தையும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 7 பேர் விடுதலை பற்றி கேட்டதற்கு நடிகர் ரஜினி கூறியதாவது : 7 பேரா எந்த 7 பேரு எனக்கு எதுவும் தெரியாதே நான் இப்போ தான் வறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின் இறுதியாகவும் அதே கேள்வி கேட்கப்பட அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று பதில் அளித்தார். ரஜினியின் பேட்டியைத் தொடர்ந்து ரஜினிக்கு _ தெரியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்டாகி வருகிறது. இவரது இந்த பதிலுக்கு இணையத்தில் நடிகர் ரஜினியை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news