நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினி கூறியுள்ளதாவது : நேற்று 7 பேர் விடுதலை பற்றி பொத்தாம் பொதுவாக கேள்வி எழுப்பியதால் நான் தெரியாது என கூறினேன். அதுக்காக அந்த 7 பேரரை தெரியாத அளவுக்கு முட்டாள் அல்ல இந்த ரஜினிகாந்த்.

பேரரறிவாளன் பரோலில் வெளிவந்தபொழுது தோலைபேசியில் தொடர்புகொண்டு 10 நிமிடம் பேசியவன் இந்த ரஜினிகாந்த். 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து. பிஜேபி பற்றி நான் கூறியது என்னவென்றால், எதிர்க்கட்சிகள் பிஜேபி ஆபத்தான கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போ எதிர்க்கட்சிகளுக்கு பிஜேபி ஆபத்தான கட்சிதானே என கூறினேன். அந்த கட்சி ஆபத்தான கட்சியா இல்லையா என்பது மக்கள் முடிவு செய்வார்கள். இது பற்றி என் கருத்தை நான் இப்பொழுது சொல்ல முடியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news