ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 2.0 ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இந்த காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது : மேடையிலமர்ந்திருக்கும் அனைவருக்கும், இங்கு வந்திருக்கும்பத்திரிக்கை நண்பர்களுக்கும், மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் வணக்கம். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். இந்த படம் வெற்றி பெறுவதற்கு முழு கரணம் ஷங்கர் மட்டும்தான். ரஜினியோ, அக்ஷய் குமாரோ அல்ல. ஷங்கர் சார், இந்தியன் ஜேம்ஸ் கேமரூன்.

இந்த படத்துல அவரோட மேஜிக் வேல செய்யும். இதுல ஒரு இன்டெர்னஷ்னல் மெசேஜ் இருக்கு. அதுக்காக நான் ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன். இந்த படம் அனைத்து மக்களுக்கமானது. எல்லாரும் இங்க வந்ததுக்கு நன்றி. ஷங்கர் இந்த கதையை சொன்னப்ப அவரால இந்த பெரிய பட்ஜெட் படத்த பண்ண முடியுமான்னு நான் யோசிக்கல.

ஏன்னா அவரால முடியும். இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்ச ஒரு 7 நாளில் உடம்பு சரியில்லை. ஷன்கார்க்கிட்ட முடியல என்ன விட்டுடுங்க அப்டினு சொன்னேன். ஷங்கர் எனக்கு ஊக்கம் கொடுத்தார். இந்த படம் தள்ளி போய்க்கிட்டே இருக்குனு நெறய பேர் பேசிக்கிட்டாங்க. லேட்டா வந்தாலும் உறுதியா அடிக்கனும். நான் படைத்த சொன்னேன் என ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news