பெண்கள் #MeToo தவறாக பயன்படுத்த கூடாது என கூறிய நடிகர் ரஜினிகாந்த் – விவரம் உள்ளே

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன், நடன இயக்குநர் கல்யாண், நடிகர் ஜான் விஜய் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்திடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த் கூறியதாவது :

பெண்களுக்கு சாதகமான மூவ்மென்ட் இந்த #MeToo. இதைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சரியாகப் பயன்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் என் கருத்து என ரஜினிகாந்த் கூறினார். அப்போது வைரமுத்து மீது கூட இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதே ? என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது :

ஆனால் வைரமுத்து அதை மறுத்திருக்கிறாரே. அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை, அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். வழக்கு போடுவேன் என்றும் கூறியிருக்கிறார் என கூறினார். #MeTooவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கிறாரா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் கூறியதாவது : பெண்களுக்கு நிச்சயமாக இது உபயோகமாக இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news