September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

இயக்குனர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரசன்னா. விவரம் உள்ள

நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மம்மூட்டியைப் பாராட்டிப் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது கூறியதாவது :

நான் பெண்ணாக இருந்திருந்தால், மம்மூட்டியைக் கற்பழித்திருப்பேன் என கூறினார். இப்பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரசன்னா இது பற்றி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரசன்னா கூறியதாவது : மிஷ்கின் எனது நண்பர்தான். ஆனாலும் தமிழ் நடிகர்கள் பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் கூறிய வார்த்தைகள் குறித்து நான் அருவருப்படைகிறேன், வெட்கப்படுகிறேன். அதைக் கேட்டு சிரித்த மக்களைப் பார்த்து பாவப்படத்தான் முடியும் என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news