September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர் – விவரம் உள்ளே

மறைந்த முன்னாள் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படங்களாக எடுப்பது, தற்போது வழக்கமாகி வருகிறது. ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை படமாக தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் வாழ்க்கை படமாக உருவெடுத்தால் பத்திரிகை, சினிமா மற்றும் அரசியிலில் அவரின் பங்கு போன்றவைகள் காட்சிப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. தற்போது, திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வேடத்தில் நடிக்க தேசிய விருது பெற்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வளம் வரும் பிரகாஷ்ராஜ் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது : கருணாநிதி போல் இன்னொருவர் வருவது கடினம். இனி அப்படிப்பட்ட தலைவரை எத்தனை தலைமுறை தாண்டினாலும் காண்பது அரிது. அவர் நம் தமிழை வளர்த்தவர். தமிழுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர். அவரை போல் நான் வாழ்வது கடினம்.

ஆனால், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது வரப்பிரசாதம் என எண்ணுகிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவெடுத்து வரும் நிலையில் கருணாநிதியின் வாழ்க்கை விரைவில் படமாக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news