எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – நடிகர் பிரகாஷ் ராஜ்

போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது : சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது.

இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக பாஜக அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகிறது.

என்னை இந்துத்வாவிற்கு எதிரானவன் எனச் சித்தரிக்கின்றனர். ஆனால் எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வதந்திகள் மூலம் பயனடைய வலதுசாரிகள் அமைப்புகள் முயற்சி செய்கின்றன. பொய் செய்திகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். வதந்திகளை நம்பி கும்பல் வன்முறையும் அதிகரித்துள்ளது. முதலில் நாம் மனிதர்கள், பின்னர் நாட்டின் குடிமக்கள் என்ற உணர்வு வேண்டும்.

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவன் வாழ்கின்ற வாழ்க்கையில் இருக்கிறது. உயரமான சிலையில் அது எப்படி இருக்கும்? படேல் சிலை எப்படி இந்தியாவின் ஒற்றுமையாக இருக்க முடியும். தவறான முறையில் இந்துத்துவாவை பரப்புகின்றனர். படேலின் உயரமான சிலை நாட்டுக்கு தேவையா ? அது எப்படி இந்தியாவின் ஒற்றுமையாக இருக்கும். உயரம் என்பது தன்னுடைய வாழ்க்கை முறையில் இருக்க வேண்டுமே தவிர சிலையில் இருக்க கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news