எனது கணவரை காணவில்லை என பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி போலீசில் புகார் – விவரம் உள்ளே

கண்ணா லட்டு தின்ன ஆசையா, மனிதன், கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபலமடைந்தவர் சீனிவாசன். பவர்ஸ்டார் எனும் அடைமொழியுடனேயே திரையுலகிற்கு அறிமுகமான சீனிவாசன், ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டவர். இந்தப் பிரச்சினைகளாலும் சர்ச்சைகளாலுமே பரவலாக அறியப்பட்ட சீனிவாசன், சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், காமெடியாலும் பவர்ஸ்டார் பட்டத்தாலும் இன்னும் புகழ்பெற்றார்.

இந்த நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி, சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் கணவர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பவர்ஸ்டார் சீனிவாசன் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருந்துவருவதாகவும் பணம் கேட்டு சில மிரட்டல்கள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசன், ஊட்டியில் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news