September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயனின் இந்த செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது – சூரி

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா.

விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் சூரி கூறியதாவது : மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமான செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன்.

ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன் என நடிகர் சூரி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news