September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இணைந்த இளம் பிரபலம். விவரம் உள்ளே

அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல் ஹாசன், அவ்வப்போது திரை துறை பணிகளையும் கவனித்து வருகிறார். சமீபகாலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அரசியல் பணிகளால் திரைத்துறை வேலைகளுக்கு ஒய்வு கொடுத்துள்ளார். நடிப்புக்கு ஒய்வு கொடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்தை கவனமாக கையாள்கிறார்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், தற்போது தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் – அக்‌ஷரா ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாசரின் மூன்றாவது மகன் அபி மெஹ்தி முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நாசரின் இரண்டாவது மகன் லுத்ஃபுதின், சைவம், இது என்ன மாயம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, இவரின் தம்பியும் இந்தப் படத்தின் மூலமாக சினிமாத்துறையில் அடியெடுத்து வைக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிக்க தெலுங்கு நடிகர் நிதினை அணுகிய படக்குழு, பின் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news