என மீது வைத்த நம்பிக்கையால், இவர் கதையே கேட்காமல் நடித்தார் – மெட்ரோ சிரிஷ்

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கூறியதாவது : இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன். முதல் விஷயம் யுவன் சார் இசை தான் இந்த படத்துக்கு வேணும் என நான் ரொம்ப தீவிரமாக இருந்தேன்.

தயாரிப்பாளர், இயக்குனர், நான் மூவரும் அவரை போய் சந்தித்தோம். அவர் கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குனர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என நடிகர் மெட்ரோ சிரிஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news