Inandoutcinema - Tamil cinema news

7 பேரை விடுவிப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது எதனால்? – மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி ஏரி கண்மாயில் பனை மரம் விதைகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். பின்னர் ஏரி கண்மாய் அருகே பனை மர விதைகளை நட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.


தற்போது உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது. ஆனால் தமிழக கவர்னர் இது தொடர்பாக முடிவு எடுக்காமல் தாமதம் செய்து வருகிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக அரசு தீர்மானம் ஆகியவை அனுப்பியும் 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படும் கவர்னரை உடனே மாற்ற வேண்டும்.


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுப்பிரமணியசாமி, சந்திரசாமியை விசாரிக்காமல் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு 27 வருடம் சிறை வைத்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news