தியேட்டர் கிடைக்கல ஆனாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ‘சிகை’ எப்படி! – இதோ இப்படி!

நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுப்பு என்பவர் இயக்க கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய படம் ‘சிகை’. இந்த படத்தில் ரித்விகா, ராஜ் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த நிலையில் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் ஏற்பட்டது மேலும் சிறு பட்ஜெட் படம் என்பதால் பொதுமான தியேட்டர்களும், காட்சிகளும் கிடைக்கமல் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது.

இந்நிலையில் இனிமேலும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் படத்தை இணையத்தளதில் ரிலீஸ் செய்கின்றனர். அதன்படி, ஜி5 ஆப்பில் சிகைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இதனை வீட்டில் இருந்தபடியே கட்டணம் செலுத்தி பார்க்களாம். தமிழ் சினிமாவில் ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டு தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் ஆகமல் உள்ள நிலையில் இந்த முயற்சி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news