Inandoutcinema - Tamil cinema news

வெள்ள அபாயத்தால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி சென்னை திரும்பிய நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில், விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகிய வெற்றி திரைப்படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர். இன்னிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 150 பேர் அடங்கிய குழு ஓன்று, குலு, மணாலிக்கு புறப்பட்டு சென்றது.

குலு, மணாலியில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் கார்த்தி, குலு, மணாலியில் நிலைமை மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் கார், பேருந்து என பல அடித்துச் செல்லப்பட்டது.

மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஓடியதை என் கண்ணால் பார்த்தேன். இதை எல்லாம் பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என கூறினார். மேலும் காரில் இருந்த நான் பத்திரமாக கிராமத்திற்கு வந்துவிட்டேன். படக்குழுவினரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கி, சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை.

படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் லக்ஷ்மணனுக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நடிகர் கார்த்தி கூறினார். இன்னிலையில் சென்னை திரும்பிய கார்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது : நான், நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். குலுமனாலியில் மழை நின்று விட்டதாக சொன்னார்கள். படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்த 140 பேர்களும் பாதுகாப்பாக சென்னை திரும்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news