Inandoutcinema - Tamil cinema news

தேவ் படத்தின் டப்பிங் பணிகளை துவக்கி வைத்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் படக்குழு சிக்கியது. கார்த்தி அதிர்ஷடவசமாக உயிர்த் தப்பியதாகக் குறிப்பிட்டார்.

குலு மணாலியில் முழு வீச்சுடன் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் படப்பிடிப்பு ரத்தானது. இதனால் சிறிது காலம் படப்பிடிப்பு தள்ளிப்போனது. நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் தேவ். இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியது.

நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. குலுமணாலியில் எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர்.

அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும் , மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமயமலையில் படமாகிறது. தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமயமலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news