அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஓன்றுதான், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த படம் நாளை உலகமெங்கும் [அக்டொபர் 18] வெளியாகவுள்ளது. விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் வரலட்சுமி வில்லி அவதாரம் எடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். பெரும்பாலான தமிழ் படங்களின் துவக்கத்தில், படத்தின் கதை அறிமுகத்திற்காக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் சண்டக்கோழி 2 படத்திற்கும் நடிகர் கார்த்தி, முதல் பாகத்தில் என்ன நடந்தது இனி என்ன நடக்க போகிறது என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் விதமாக படத்தின் துவக்கத்தில் தனது குரலை பதிவு செய்துள்ளார்.
விஷாலும் கார்த்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து படங்களில் நடிக்கா விட்டாலும், நடிகர் சங்க தலைவராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பல பணிகளை சேர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.