Inandoutcinema - Tamil cinema news

வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடைக்குட்டி சிங்கம் தமிழில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் சின்ன பாபு என்ற பெயரில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னிலையில், இதற்கான வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் கார்த்தியும் ஹைதராபாத் சென்று இருந்தார். அப்போது அவருடைய கார் மழையின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அருகில் இருந்த ஆட்டோவை பிடித்து, விழாவிற்கு சரியான நேரத்தில் சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news