Inandoutcinema - Tamil cinema news

விவசாயியாக உருவெடுக்க நிலம் வாங்கிய நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலர் புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கிற்கு நேற்று சென்றுள்ளனர்.

மேலும் அங்கு பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார். அப்போது அதற்கு முன்னதாக திருச்சியில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது : கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன். படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது.

படம் எடுக்கும்போதே நாங்கள் அழுதோம், தற்போது படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நெகிழ்ந்து அழுகிறார்கள். எனக்கு விவசாயம் பிடிக்கும். விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், நேரம் இல்லை. இப்போதும் கிராமத்துக்குச் சென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலைகளைச் செய்கிறேன். விவசாயம் செய்ய நானும் நிலம் வாங்கி விட்டேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். விவசாயம் செய்யவிருக்கும் நடிகர் கார்த்தியை திரை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news