இந்த இயக்குனர் எல்லாரையும் பேசி மயக்கிவிடுவார் – ரவி

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவாகி தமிழில் வெளியான திரைப்படம்தான் அடங்க மறு. இத்திரைப்படத்தில் ரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சாம் சி. சிஎஸ் இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போ நடிகர் ரவி கூறியதாவது : தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும்.

இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம். நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என நடிகர் ரவி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news