September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

தமிழுக்காக உறுதிமொழி எடுத்த நடிகர் ஜிவி பிரகாஷ் – விவரம் உள்ள

வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி.பிரகாஷ், டார்லிங், பென்சில், நாச்சியார் போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜிவி பிரகாஷ் அரைடஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.

இன்னிலையில், மக்கள் பாதை என்ற அமைப்பு விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். மக்கள் பாதை அமைப்பின் சார்பாக நடந்த தமிழ் கையெழுத்து இயக்க விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் நடிகர் ஜிவி பிரகாஷ் கலந்துகொண்டார். அந்த விழாவில் பங்கேற்றதன் தொடர்ச்சியாக, தான் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் என உறுதியேற்றுள்ளார்.

அது தொடர்பாக தன் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் செய்தியொன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : உலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ். இனி புதிய விதி செய்யும் என் கையெழுத்துகள் தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்.

தமிழ்விதியெனசெய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தன் பெயரின் முன்னெழுத்தையும் தமிழ்ப்படுத்தி கோ.வெ.பிரகாஷ்குமார் எனக் கையெழுத்திட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news