எதிர்பார்த்ததைவிட பாதிப்புகள் அதிகம் – களத்தில் இறங்கிய ஜிவி பிரகாஷ்

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பிரபலத்தின் ரசிகர்கள் மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் தங்களால் முடிந்த நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகின்றனர்.

கஜா புயலினால் டெல்டா பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனை வாய்ப்பாக கருதி சிலர், வீழ்ந்த தென்னை மரத்தின் தேங்காய்களை குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலமும் மனிதாபிமானமே இல்லாமல் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஜிவி பிரகாஷ் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளை காண சென்ற அவர், பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். வீழ்ந்த தேங்காய்களுக்கு, விவசாயிகளுக்கு உதவ கூடிய வகையில் ஒரு விலையை நிர்ணயம் செய்து வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான மொபைல் எண்ணையும் பதிவு செய்துள்ளார். அவர் ஒரு காணொளி மூலம் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இன்டர்நெட் போராளிகளுக்கு மத்தியில் நேரடியாக காலத்தில் இறங்கி உதவிய ஜிவி பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news