September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் ஜிவி பிரகாஷுக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே

மூடப்படும் நிலையில் இருக்கும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இறங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

சமீப காலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன்.

எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டுகிறேன் என நடிகர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இதற்க்கு திரை பிரபலங்கள் உட்பட பலர் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news