Inandoutcinema - Tamil cinema news

துல்கர் சல்மானின் புது படத்தில் நான்கு கதாநாயகிகள். விவரம் உள்ளே

நடிகர் துல்கர் சல்மான் 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் நடிகராக துல்கர் சல்மான் வளர்ந்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்க வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 24 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இது அவருக்கு 25 வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். தேசிங்கு பெரியசாமிக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த படத்திற்கு இசைப்புயல் ARR இசையமைக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் ஜி.வி.எம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துல்கரின் அடுத்த படத்திற்கான தகவல் கசிந்துள்ளது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை கார்திக் என்ற புது இயக்குனர் இயக்க இருப்பதாகவும், அதில் 4 கதாநயகிகள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் நிவேதா பெத்துராஜ் மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டதாகவும், மற்ற இரு நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news