இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு

வடசென்னை படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷ் குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வடசென்னை’ படத்தை 2 அல்லது 3 பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். ஆனால், 2-வது பாகத்துக்கு முன்னதாக, மற்றொரு கதையில் வெற்றிமாறனும், தனுஷும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை இருவருமே உறுதி செய்தார்கள். இன்னிலையில் நாலாவது முறையாக தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி இணையும், படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அசுரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அசுரன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, நடிகர் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டதாவது : மாரி 2 படத்தின் வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில், எனது அடுத்த படமான ‘அசுரன்’ அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெற்றிமாறன் இயக்க, தாணு சார் தயாரிக்கிறார் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news