இளையராஜாவைவிட யுவன்தான் பெஸ்ட்டா ? தனுஷ் விளக்கம்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்பொழுது பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது : நான் துள்ளுவதோ இளமை நடிச்சுக்கிட்டு இருந்தபோது, செல்வா சாரும், யுவன் சாரும்தான் க்ளோஸ். அப்போதே நான் பிரம்மிச்சுப் பார்க்குற ஸ்டார் யுவன். செல்வா சாரும், யுவன் சாரும் அப்பப்போ வெளியில் போகும்போது, செல்வா சார் என்னைக் கூப்பிட்டு, என் தம்பி இவனும் சும்மா கூட வரட்டும் என யுவனிடம் சொல்வார். வரச் சொல்லுய்யா, என்று சொல்லி, என்னையும் உடன் அழைத்துச் செல்வார் யுவன். அவரைத் தூரத்தில் இருந்தே பார்த்துப் பயங்கரமாக ரசிப்பேன். துள்ளவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் ஆகிய படத்துக்கு அடையாளம் கொடுத்தது அவருடைய இசை தான்.

அந்த இசை இல்லேன்னா, அந்தப் படத்துக்கு ஓப்பனிங் கிடைச்சுருக்காது. அந்தப் படம் ஓடலைன்னா, நிஜமாகவே நாங்க நடுத்தெருவுல தான் நின்னுருக்கணும். அந்த சூழ்நிலையிலதான் அன்னிக்கு இருந்தோம். யுவனுக்கும், அவருடைய இசைக்கும் நாங்க கடமைப்பட்டிருக்கோம். துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவன் சாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

சிலருடைய மனது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்ப் பக்கம் உள்ள பேர் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தப் பக்கம் யுவன் பேர் மட்டுமே இருக்கும். இதுதான் நிஜம். இதனால் சிலர் மனது வருத்தப்பட்டாலும், அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news