பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை என கூறிய நடிகர் தனுஷ். எந்த படம் தெரியுமா ?

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராட்சசன். தில்லி பாபு தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள்.

நாயகன் விஷ்ணு விஷால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ராட்சசன் திரைப்படத்தை பார்த்த பல்வேறு திரையுலக் பிரபலங்களும் தங்களுடைய கருத்துகளை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இன்னிலையில் இந்த படத்தை பற்றி நடிகர் தனுஷ் கூறியதாவது : ராட்ச்சன்! வாவ்! மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர்.

புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான மேக்கிங். பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை. சீட்டிம் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர். நான் படத்திற்குள் மூழ்கி விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news