September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்காருடன் நேரடியாக மோதும் நடிகர் தனுஷின் திரைப்படம் – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகும். இந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் தொல்லை போய்க்கொண்டே இருந்தது.

தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடுவதற்க்கு படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் உள்ள மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவு குறித்து ட்விட் செய்துள்ள இயக்குநர் கவுதம் மேனன், படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், தனுஷ், சசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு ஏற்கெனவே சர்கார் மற்றும் என்ஜிகே ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் என்ஜிகே ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் சர்காருக்கு நேரடி போட்டியாக எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news