நூறு விஜய் சேதுபதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது – போஸ் வெங்கட்

vijay sethupathi entry

கடந்த மாதம் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமடைந்தது. இதற்க்கு தன்னார்வல தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள்திரை பிரபலங்கள் உட்பட பலர் தங்களால் ஆனா உதவிகளை செய்தனர். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை பற்றி போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. கஜா புயல் அடிச்ச மறுநாள், ஊர்லேருந்து அண்ணன் போன் பண்ணினாரு. எல்லாம் போச்சுடான்னு சொல்லி கதறி அழுதாரு. ஊர் நிலவரம் மொத்தத்தையும் சொன்னாரு. மெழுகுவத்தி, லைட்ஸ், மற்ற பொருட்கள்னு வாங்கிட்டுப் போய் கொடுத்தோம். ஊர்ல, கராத்தே அஸோஸியேஷன் நண்பர்கள் சேர்ந்து எங்களால முடிஞ்சதைச் செஞ்சோம். விஜய் சேதுபதி நல்ல நண்பர் எனக்கு. அவர் அப்போ வெளிநாட்ல இருந்தார். அவரோட நண்பர் ராஜேஷ்கிட்ட விவரம் சொன்னேன்.

உடனே லைன்ல வந்தார் விஜய்சேதுபதி. என்ன பாஸ் சொல்றீங்க, சாதாரண புயல்தானேன்னு நெனைச்சேன்’ன்னு சொன்னார். கொஞ்ச நேரத்துல, கஜா புயலுக்கு 25 லட்சம் ரூபானு அறிவிச்சிருந்தார். அதேபோல நடிகர் கார்த்திகிட்ட பேசினேன். இப்பதான் 50 லட்சம்னு சொல்லிருக்கோம். வேற என்ன வேணும்’னு கேட்டார். கேட்டா பொருட்களையெல்லாம் அனுப்பிவைச்சார். அந்த மக்களுக்கு, விவசாயிகளுக்கு, நாம கொடுக்கிற பொருளெல்லாம் சின்னச் சின்ன தேவைகள்தான். அதுக்குத்தான் கொடுத்துக்கிட்டிருக்கோம். அவங்க நிலங்களையும் தோப்புகளையும் விழுந்து கிடக்கற மரங்களை அப்புறப்படுத்தணும். அடுத்தாப்ல, மரக்கன்று நட்டுத்தரணும். இதெல்லாம் பணக்காரங்கதான் செய்யமுடியும். நாலரை ஏக்கர்ல விழுந்த மரங்களையெல்லாம் அப்புறப்படுத்தி, அந்த நாலரை ஏக்கர்ல, மரக்கன்று நட்டுத்தருவதை சத்தமே இல்லாம விஜய் சேதுபதி செஞ்சிட்டிருக்கார்.

அந்தப் பொறுப்பை, விஜய் சேதுபதி எங்கிட்டக் கொடுத்திருக்கார். விஜய் சேதுபதி இன்னும் நாலு தோப்புகளை எடுக்கமுடியும். ஆனா, விஜய் சேதுபதி மாதிரி, நூறு விஜய் சேதுபதி முன்வரணும். அதுவும் பாத்தது. ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச நிலங்களை சுத்தப்படுத்தி, புது மரக்கன்று நட்டுத்தந்தா, இந்த லட்சாதிபதிகளெல்லாம் திரும்பவும் லட்சாதிபதிகளா ஆயிருவாங்க. கூலித்தொழிலாளர்களாவதை தடுத்துடலாம். விஜய் சேதுபதி மாதிரி அதுக்கு உதவி செய்ய வரணும் என நடிகர் போஸை வெங்கட் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news