முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஆகும். 1995ல் நடிக்க வந்தாலும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படமே அவருக்கு 25வது படமாக அமைந்தது. திரையுலகில் மறக்கப்பட்டுக்கொண்டு இருந்த இவர், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான குற்றம் 23 படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், சமீபத்திய பெட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்ற நீண்டகால ஆசையை பற்றி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் முதல் முதலில் நடிக்கவிருந்த லவ் ஸ்டோரி படத்துக்கு ரஹ்மான் சார் இசையமைப்பதாக இருந்தது.
சில காரணங்களால முடியாம போச்சு. இப்போது, என் 25-வது படமான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ரஹ்மான் சார் இசையில் நடிக்கிறேன். இது, மணிரத்னம் சார் படமா அமைஞ்சது, இன்னும் சந்தோஷம். ஷூட்டிங் ஸ்பாட்டில் மெதுவாக ரெடி, ஆக்ஷன் சொல்வார்னு நினைச்சேன். ஆனா, புது இயக்குநர் மாதிரி பயங்கர ஃபயரோடு இருந்தார், மணி சார். அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, நான், என எல்லோருக்குமே செக்கச் சிவந்த வானம் பெரிய சர்ப்ரைஸ் என கூறியுள்ளார்.