September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதிரடி சண்டைகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு அதில் இருந்தது. இது சிவகார்த்திகேயன் டிரெய்லரை விமர்சிக்கும் வகையில் அந்த பதிவு இருந்ததாக பட உலகில் கூறபட்டது.

இதைத்தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. சற்றுமுன்புதான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது.

நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என அருண் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன்.

நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, இழிவு படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் நடிகர் அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news