Inandoutcinema - Tamil cinema news

உதவி இயக்குனராக வேலை பார்த்த விஷாலை பற்றி, ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் – விவரம் உள்ளே

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் மற்றும் விமர்சனத்துக்குள்ளானார் நடிகர் விஷால். இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால்.

அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் மற்றும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என இரு நிகழ்வையும் நேற்று ஒரே மேடையில் அரகேற்றினர் விஷால். அப்போது பேசிய நடிகர் அர்ஜுன் கூறியதாவது : விஷாலை சிறுவயதிலிருந்தே நன்கு தெரியும்.

நான் வேதம் படம் இயக்கிக் கொண்டிருந்தபோது, விஷாலை தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி கூட்டிவந்து, டெக்னிகலாக கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கிறான். நீ உதவியாளராக சேர்த்துக்கொள் என்றார். அதன்பிறகு என்னுடைய படத்தில் பணியாற்ற ஆரம்பித்தார்.

பேக்ரவுண்ட் க்ளியர் பண்ண வேண்டுமென்றால் விஷாலிடம் தான் சொல்வேன். ஓடிப்போய் சுறுசுறுப்பாக வேலைகளை முடித்து விடுவார். நடிகர்களுக்கு காட்சிகளை விளக்க நடித்து காட்டச் சொன்னாலும் சிறப்பாக செய்வார். அப்போதே விஷாலிடம் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற பொறி தெரிந்தது என அர்ஜுன் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news