ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தல அஜித் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஜெர்மன் சென்று வந்த நடிகர் அஜித்குமாரை காண சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் திறண்டனர் அவர்களை போலீசார் தடி அடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித்குமார் டிரோன் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் உருவாக்கிய தக்‌ஷா என்ற டிரோன் சர்வதேச யூஏவி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பலரது கவணத்தையும் ஈர்த்தது.

இதன்பின்னர், விஸ்வாசம் படபிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் நடிகர் அஜித் தொடர்ந்து சென்னை ஐஐடி மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி அளித்து வருகிறார். இதுதொடர்பாக ஆராயிச்சிகள் மேற்கொள்ள நடிகர் அஜித்குமார் ஜெர்மன் நாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஜெர்மனியில் இருந்து அஜித்குமார் சென்னை திரும்பினார். அவர் விமான நிலையம் வருவதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை காண சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கில் திறண்டனர். அஜித் வரும் போது அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்துகொண்டு ஓடினர். இதனால், மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.

மேலும், நடிகர் அஜித்தும் விமான நிலையத்தை விட்டு வெளியேர முடியாமல் தவித்தார். இதையடுத்து, விமான நிலைய மத்திய பிரிவு போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடிகர் அஜித்குமாரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news