September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

கொளுத்திப்போட்ட ஜிவி பிரகாஷ், கொழுந்துவிட்டெறிந்த நடிகர் ஆரி – விவரம் உள்ளே

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளார்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரியுடன் இணைந்து வழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் ஆரி தனது பேட்டியில் கூறியதாவது : என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை.

என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும். உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.

நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள். ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன.

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே. எம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என கூறி நடிகர் ஆரி தனது உரையை முடித்தார். கடந்தவாரம் நடிகர் கோ.வெ.பிரகாஷ் [ஜிவி பிரகாஷ்] தமிழில் கையெழுத்திடுவதை உறுதிமொழி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news