September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஆதி – விவரம் உள்ளே

தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற திரைபடம், இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில், கடந்த ஜூலை மாதம் 12 – ம் தேதி வெளியானது. இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி நிலவியது . இன்னிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் என்பதால், இப்படத்தை தமிழில் யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கதையின்படி இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் நாயகியின் கதாபாத்திரம் சவால் நிறைந்தது.

அதனால் இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகையை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news