September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

டி20 வரலாற்றில் உலக சாதனை படைத்த ஆரோன் ஃபின்ச். விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கிடையேயான முத்தரப்பு 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஜிம்பாவே, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்சி சார்ட் ஆகிய இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்த ஆரோன் பின்ச், நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய பின்ச் 50 பந்துகளில் 2வது 20 ஓவர் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை அதிரடியில் கலக்கிய இந்த இணை இறுதி ஒவரில் பிரிந்தது. டி ஆர்சி சார்ட் 46 ரன்னிலும், ஆரோன் பின்ச் 172 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் போட்டியில் தனது முந்தய சாதனையை முறியடித்து தனிநபர் அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார் பின்ச்.

மேலும் 20 ஓவர் போட்டியில் விக்கட் இழப்பின்றி 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமை ஆத்திரேலிய அணிக்கு கிடைத்துள்ளது. 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 229-2 எடுத்தது. பின்னர் மாபெரும் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாவே அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டி பின்னர் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து திணறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 129-9 எடுத்து. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news