நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். பின்னர் மீண்டும் காஞ்சனா படத்தின் மூன்றாம் பக்கத்தில் கவனம் செலுத்தினார். ராகவா லாரன்ஸ் ஆகஸ்ட் 2017ல் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார்.

அவரது வழக்கமான துணை நடிகர்களான, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் இப்படம் தயாராகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இதன் படப்பிடிப்பு நடைபெற்று, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னிலையில் இந்த படத்தின் வெளியிட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து படம் வெளியிடப்பட இருக்கிறது. காஞ்சனா 2 படமும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு நல்ல வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக இந்த படத்தையும் கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இசைக்காக மதன் கார்க்கியின் டூபாடூ நிறுவனத்துடன் நடிகர் லாரன்ஸ் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news