Inandoutcinema - Tamil cinema news

ஸ்ரீ ரெட்டியை கடுமையாக விமர்சித்த பிரபல தமிழ் நடிகை . விவரம் உள்ளே

நடிகை ஸ்ரீ ரெட்டி, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றியவர்கள் என ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். தெலுங்கு லீக்ஸ், பின்னர் தமிழ் லீக்ஸ் என்று பலரை பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டார். இதற்கு திரையுலகினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. மேலும் பல தரப்பினரிடையே இருந்து கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்னிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது : ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை.

அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண் யோசித்ததாகவே தெரிகிறது. சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு, ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை, அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு இணங்கித்தான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.

உங்க கூட நடிக்கனும் சார். அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார். என்று வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணை ஒரு நடிகர் கடுமையான தொணியில் புத்தி சொல்லி அனுப்பியதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை. ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள். நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார் என நடிகை கஸ்தூரி கோவமாக கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news