September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல நடிகர் நடிக்கும் புதிய படம், அர்னால்டு படத்தின் காப்பியா ? விவரம் உள்ளே

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளியிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நான் செய்த குறும்பு என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை போன்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவராக சந்திரனும் ஐடி கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியனும் நடிக்க இருக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், ஜூனியர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் சந்திரனின் நான் செய்த குறும்பு என கூறிவருகின்றனர். பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு நடிப்பில் வெளியான ஜூனியர் படத்தில் அர்னால்டு இதே போன்று கருவுற்று இருப்பார்.

அதனால் இது அந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இது பற்றி நடிகர் நடிகர் சந்திரனிடம் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் இப்படம் ரீமேக்கோ தழுவலோ அல்ல என கூறியிருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news