தேவி திரைபடத்தைத் தொடர்ந்து பிரபு தேவா மற்றும் இயக்குனர் எ.எல்.விஜய் இருவரும் மீணடும் இணைந்துள்ள இந்தப் படம், லக்ஷ்மி ஆகும். இந்த படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, ஆண்டனி எடிட் செய்துள்ளார். இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.
இன்னிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து தேவி 2 படத்துக்காக இதே கூட்டணி மறுபடியும் விஜய் – பிரபுதேவா இணைய இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா உள்பட மொத்தம் மூன்று கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் உருவாக வுள்ள ‘தேவி 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்த, மொரீ ஷியஸ் நாட்டில் ஒரு வாரம் லொக்கேஷன் பார்த்து திரும்பி இருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தின் முழு காட்சிகளையும் ஒரே ஷெட்யூலாக மொரீ ஷியஸிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற் காக படக்குழு வரும் அக்டோபரில் அங்கு செல்ல உள்ளது. விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.