100 நாட்களை கடந்து சாதனை படைத்த 96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் 96. இந்த படம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர்.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த வருடம் அக்டோபர் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்நிலையில், படம் ரிலீஸாகி 100 நாட்கள் கடந்துவிட்டன. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி, கடந்த தீபாவளிக்கே இதனை ஒளிபரப்பியது. இருந்தாலும், இன்னும் இந்த படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. 100 வது நாளான இன்று மாயா ஜால் திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்படுகிறது.

அனைவரின் பள்ளிக்காலக் காதல் நினைவுகளைக் கிளறிவிட்ட இந்தப் படம், காலம் கடந்தும் கொண்டாடப்படும் காதல் படமாகத் திகழும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே தர்மதுரை மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் 100 ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news