September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

தமிழகம், உள்பட 20 மாநிலங்களில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ரிப்போர்ட்

சென்னை: தமிழகத்தில் உள்பட பல்வேறு மாநிலங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (இன்று) கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல உத்திரபிரதேசம் கிழக்கு பகுதி, மேற்கு வங்கத்தில் இமயமலை ஒட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகார் ஆகிய மாநிலங்களில் செவ்வாய் கிழமை (இன்று) முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

 

20 மாநிலங்களில் மழை

மேலும், தமிழகம், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், கொங்கன் பகுதி, ராய்லசீமா மேலும் கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

இதேபோன்று மகாராஷ்டிரா மத்தியப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையை ஒட்டிய மாவட்டங்கள், குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிசா, மேகாலயா, கேரளா, கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வரும் வியாழக்கிழமையும், கோவா, கொங்கன் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும். நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் வெள்ளிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுக்கு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை தொடரும்

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை நல்ல மழை பெய்துள்ளது. சென்னையை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பொருத்தவரை வெய்யில் வட்டி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெப்பம் குறைந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை தொடரும் என்று அறிவித்த்த்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news