September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இளைஞர்கள் மனதில் டியூன் போட வைத்த இசையமைப்பாளர்

சென்னை: ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது.
அந்த வகையில் பிரேம் ஜி இசையில், வடகறி பட இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் உருவாக்கி வரும் ஆர்.கே.நகர் படத்தில் வரும் ”பாப்பர மிட்டாய் ” பாடலுக்கு கிடைத்துள்ளது. காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.
பிரேம் ஜி குறித்து இயக்குனர் சரவண ராஜன் கூறுகையில்: “பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞராகவே நான் அவரை உணர்கிறேன்.
பின்னணி இசையில்  பிரேம்ஜி மிகச்சிறந்தவர். அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர் கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும்” என்றார்.
 
படத்துக்கு ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி படத்தை தயாரிக்கிறார்.
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news