September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

10 நிமிடம் யோகா.. பலன் தறும் நன்மைகள் – உலக யோகா தின ஸ்பெஷல்

சென்னை: இன்று சர்வதேச யோகா தினம். என்ன தான் பிரதமர் மோடி செய்யும் யோகா பயிற்சிகளை நாம் கேலி, கிண்டல் செய்தாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செலவே இல்லாமல் சிலிம்மாகவும், பிட்டாகவும், அழகாகவும், மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான் .

தினமும் பத்தே நிமிடம் நாம் செய்யும் யோகா பயிற்சி மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

  • அதிகாலை 4 முதல்  6 மணி வரை வெறும் வயிற்றில் யோகா செய்வதால் உடல் உறுப்புகள் கசக்கி பிழிபப்படுகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியாகி உடல் சுறுசுறுப்பாக்கிறது.
  • பெண்கள் மாதவிலக்கு காலங்களில் மூச்சு பயிற்சி யோகா செய்யலாம். இது உடலுக்கு எனர்ஜி அளிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் 3வது மாதம் முதல் 9வது மாதம் வரை யோகா செய்யலாம். இது சுகப்பிரசவர்த்திற்காகன வாய்ப்புகளை அதிகரிக்கிறது. (ஆனால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்)

  • தொடர்ந்து தினமும் யோகா செய்பவர்கள் கெட்ட கொழுப்பை வெளியேற்றி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிகரிக்க செய்கிறது. சர்க்கையையும் கட்டுக்குள் வைத்துகொள்ள உதவுகிறது.
  • 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை, குடும்பம், பொதுவாழ்க்கை என மல்டி டாஸ்க் வேலைகளில் சிக்கி சின்னா பின்னாமாகின்றனர். அவர்களுக்கு யோகா தான் சிறந்த ரிலாக்சேஷன். 20 நிமிடம் யோகா செய்வதன் மூலம் மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோல் எனும் ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால், கோபம், ஸ்ட்ரெஸ் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் குறைந்து. மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.

  • சுமார் 5000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ட யோகா பயிற்சி மதம் சார்ந்தது இல்லை. அது நாம் தினமும் குளிப்பது, பல் துளக்குவது, நடைபயிற்சி செய்வது போல ஒரு பயிற்சி. இதனை தினமும் செய்தால் தான் அதற்கான பலனை முழுவதுமாக அடைய முடியும். இதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news