September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

ராஜூ முகனின் ஜிப்சி பர்ஸ்ட் லுக் – என்ன சொல்லுது

சென்னை: குக்கு, ஜோக்கர் படங்களையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜிப்சி. ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2016 மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடாஷா சிங் என்பவர் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சத்தமே இல்லாமல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. போஸ்டரில் ஜீவா ‘‘ஹிப்பி’’ என்று அழைக்கப்படும் ஊர் ஊராக சுற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர் போல தோன்றுகிறார். நடாஷா முஸ்லிம் பெண்ணாக வருகிறார். அவர்களுடன் ஒரு வெள்ளை குதிரையும் படத்தில் நடித்திருக்கிறது.

முதல் லுக் போஸ்டரிலேயே கவனம் ஈர்கிறார் இயக்குனர் ராஜூ முருகன். போஸ்டரில் கடவுல் வேடமிட்டு தெருக்களில் பிச்சை எடுக்கும் நபர்களை பார்க்கும்போது கண்டிப்பாக படத்தில் ஒரு சோஷியல் மெஸேஜ் இருக்கிறது தெரிகிறது.

படம் குறித்து இயக்குனர் ராஜூ முருகன் கூறுகையில்; ‘ஜிப்சி என்பது பயணம் பற்றிய கதை. இந்த படத்துக்காக இந்தியா மூழுவதும் சுற்றியபோது பல நாடோடிகளை சந்தித்தேன் அவர்களிடம் இருந்து சில விஷியங்களை எடுத்து இதில் சேர்த்துள்ளேன்.

குக்கு, ஜோக்கர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும். கமர்சியல் படத்தில் கொஞ்சம் சமூக பிரச்னை பற்றி பேசியிருக்கிறோம். ஸ்கிரிப்ட் ரீதியாகவும், பட்ஜட் ரீதியாகவும் இது எனக்கு பெரிய படம். சந்தோஷ நாராயாணன் இசை அமைக்கிறார். ஜீவா இதற்கு முன்பு நடித்த படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். என்றார். இந்நிலையில் படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படபிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news